வேதகால நாகரிகம் பற்றிய முக்கியமான தகவல்கள்
வேதகால நாகரிகம் - சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பின் இந்தியாவில் தோன்றியது வேதகால நாகரிகம்.
- இது "ஆரிய நாகரிகம்" என்றும் அழைக்கப்படுகிறது
- வேதகாலம் இரு வகைப்படும்.
- முன் வேதகாலம் (கி.மு.1600 முதல் கி.மு.1000 வரை)
- பின் வேதகலாம் (கி.மு.1000 முதல் கி.மு.600 வரை)
வேதகாலம் பற்றி அறிய உதவுவது
- வேதங்கள்
- உபநிடதங்கள்
- இதிகாசங்கள்
- புராணங்கள்
- ரிக்
- யஜுர்
- சாம
- அதர்வணம்
- வேதங்களில் பழமையானது ரிக் வேதம்
- ரிக்வேதத்தில் 1028 துதிப்பாடல்கள் உள்ளன .
- காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் உள்ளது.
- யஜுர் வேதம் சடங்குகள் பற்றி குறிப்பிடுகிறது .
- சாம வேதத்தில் இசை பற்றி குறிப்பிருக்கிறது.
- அதர்வண வேதம் மாந்திரீகம் (பில்லி,சூனியம்) பற்றிக் குறிப்பிடுகிறது.
- உபநிடதங்கள் மொத்தம் - 108
- ரிக்வேத காலத்தில் ஆரியர்கள் "சப்த சிந்து" பகுதியில் குடியேறினார்கள்.
- ஆரியர்கள் சோமபானம்,சுரா பானம் அருந்தினார்கள்.
- ராஜனுக்கு (தலைவர்) அறிவுரை கூற "சபா" என்ற முத்தோர் சபையும், "சமிதி" என்ற பொது சபையும் இருந்தன.
- ரிக்வேத காலத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருந்தது.
- ரிக்வேத காலத்தில் கல்வி அறிவால் புகழ்பெற்ற பெண்மணிகள் :
- மைத்ரேயி
- கார்க்கி
- பின்வேத காலம் "இதிகாச காலம்" எனவும் அழைக்கப்பட்டது.
- ராமாயணம் - வால்மீகி
- மஹாபாரதம் - வியாசர்
- ஆரியர்கள் இயற்கை சக்திகளை கடவுளாக வழிபட்டனர்
- இந்திரன் (இடி,மின்னல்,போர்)
- வருணன் (மழை)
- அக்னி (நெருப்பு)
- மாருதி (காற்று)
- ருத்ரன் (விலங்கு) ஆகியோர் முக்கிய கடவுளாக வேதகாலத்தில் விளங்கினார்.
- கி.மு.6ம் நூற்றாண்டில் சமண,பௌத்த சமயங்களின் எழுச்சி
- கி.மு.6ம் நூற்றாண்டு இந்தியா வரலாற்றில் "சமய அமைதியின்மை காலம்" என்று அழைக்கப்படுகிறது.
For English - click here
Online Test Series
Ancient India History
Indian Polity
Current Affairs
Modern India History
Other Related Articles
Group 1 Exam
Group 2 Main Exam
Tamilnadu government Schemes
No comments:
Post a Comment